Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த 3 ஊரை சேந்தவங்களா நீங்க? நித்தி ஆஃபர் உங்களுக்குதான்!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (11:14 IST)
நித்யானந்தா புதிதாக உருவாக்கி வரும் கைலாசா நாட்டில் தமிழகத்தின் மூன்று ஊர்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா உருவாக்கி வருவதாக கூறப்படும் கைலாசா நாடு குறித்த செய்திகள் மக்களிடையே வைராலாகி வருகின்றன. கடந்த விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டிற்கான தங்க நாணயங்களை நித்யானந்தா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி கேட்டு நித்யானந்தாவிற்கு கடிதம் அனுப்பிய நிலையில், அவரது கோரிக்கைக்கு அனுமதி அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நித்யானந்தா கைலாசா நாட்டின் பொருளாதார மற்றும் வணிக செயல்பாடுகளில் மதுரை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில் மற்ற மாவட்டத்தை சேர்ந்த நெட்டிசன்கள் பலர் அந்த மூன்று மாவட்டத்தில் இல்லாமல் போய்விட்டதை மீமாக பதிவிட்டு வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments