Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் ஈபிஎஸ் சென்ற விமானம் திடீர் கோளாறு: பரபரப்பு தகவல்

Advertiesment
பிரதமர் மோடி தமிழகம் வருகை | பிரதமர் மோடி | பாஜக | அதிமுக | PM Modi | Narendra Modi | Kanyakumari | CM Palanisamy | BJP
, வெள்ளி, 1 மார்ச் 2019 (09:15 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தூத்துகுடி செல்ல சென்னையில் இருந்து கிளம்பினார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முதல்வர் பழனிசாமி விமானத்தில் புறப்பட்ட நிலையில் அவர் பயணம் செய்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
 
இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக முதல்வர் பழனிசாமி பாதிவழியில் மீண்டும் சென்னை திரும்பியுள்ள்தாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல திட்டமிட்டிருந்த தமிழக முதல்வர் பழனிச்சாமி விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் சென்னை திரும்பியுள்ளார். இருப்பினும் இன்னும் சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு மாற்றுவிமானம் மூலம் சென்று, மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
webdunia
கன்னியாகுமரியில் இன்று பிரதமர் மோடி மதுரை-சென்னை‌ தேஜஸ் ரயில் சேவையை மோடி தொடங்கி வைப்பதோடு, மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலத்தையும் திறந்து வைக்ககிறார். மேலும் பணகுடி-கன்னியாகுமரி சாலை, மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபிநந்தனை விடுவிக்க மத்திய அரசின் ராஜதந்திரம் இதுதான்;