சமீபத்தில் கஜா புயல் தாக்கிய டெல்டா மாவட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். சாலை மார்க்கமாக செல்லாமல் ஹெலிகாப்டரில் முதல்வர் சென்றதை மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் போன்ற அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் மழை காரணமாக ஒருசில பகுதிகளை பார்வையிடாமல் திரும்பிய முதல்வர், தற்போது மீண்டும் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பார்வையிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி வரும் 28ஆம் தேதி மீண்டும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த முறை அவர் சாலை மார்க்கமாக சென்று மக்களை நேரில் சந்தித்து குறை கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் முதல்வரின் ஹெலிகாப்டர் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் குறை கூறியதை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கஜா புயல் பாதித்த இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானத்தில் சென்று பார்வையிட்டதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளது என்பது தமிழகத்தில் அநாகரிகமான அரசியல் நடைபெறுகிறது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்