Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (11:24 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் நடைபெறாத சூழலில் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு தேர்வில் ஆல் பாஸ் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த வகுப்பிற்கான பாடங்களை பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் படித்து வந்தனர். மாணவர்களின் பாடச்சுமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது சட்டப்பேரவையில் பேசி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடப்பு ஆண்டில் 9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இந்த மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்ட பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments