அகில இந்திய அளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தரவாரிசையில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை தென்னிந்தியாவில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்கிடையே மூதலிடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாக கல்வி உலகம் பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு வருடமும் கல்வி உலகம் இதழானது நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கான ஆய்வில் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகுதி மற்றும் போதிக்கும் திறன், கல்வி நிறுவனத்தில் ஆசிhpயர்களின் நலம் மற்றும் மேம்பாடு, புதிய வகை ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் கண்டுபிடுப்புகள், பாடத்திட்டங்கள் மற்றும் தரமான புதிய கற்பித்தல் முறைகளை பயன்படுத்துதல், பாடத்திட்டம் சார்ந்த தொழில்நிறுவனங்களுடான புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்லூரிவளாக வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துதல், தரம் மற்றும் வளாக கட்டமைப்புகளை உருவாக்குதல், உலகமயமாக்குதல், தலைமைப்பண்புகள் மற்றும் நிர்வாகத்திறனை ஊக்குவித்தல் மற்றும் காலத்திற்கேற்ப கல்வி பாடத்திட்டங்கள் அகியவற்றின் அடிப்படையில் இந்திய அளவில் கல்வி நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் தரவரிசை பட்டியல் கல்வி உலகம் இதழால் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தென்னிந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே முதலிடத்தையும் இந்தியாவில் உள்ள 63 வேளாண்மைப்பல்கலைக்கழகங்களில் மூன்றhவது இடத்தையும், இந்திய நாட்டில் உள்ள 150 ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களில் 53 ஆவது இடத்தையும் பெற்றுள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதுணைவேந்தர், குமார், தெரிவித்தர் இது குறித்து மேலும் கூறுகையில் இப்பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் கல்லூரி நிலையங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளில் தரமான முயற்சிகளால் மேற்கண்ட காரணிகளின் மதிப்பெண்கள் 2021 ஆம் ஆண்டு 1009 என்ற நிலைக்கு கடந்த ஆண்டை (2020) காட்டிலும் (801 ) அதிகமாக எட்டியுள்ளது.
இப்பலைக்கழகமானது, வரும் காலங்களில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியல்லாதோர் ஆகியோரின் அயராத உழைப்பினால், மொத்த பல்கலைக்கழகங்களிடையே முதல் பத்து இடங்களிலும், வேளாண்மைப் பல்கலைக்கழகங்கிடையே முதல் இடத்தையும் பிடிக்கும் என பல்கலைக்கழக துணைவேந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.