Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருவண்ணாமலை மகாதீப பாதையில் மண் சரிவு: ஆய்வுக்கு பின்னர் தான் பக்தர்களுக்கு அனுமதி..!

திருவண்ணாமலை மகாதீப பாதையில் மண் சரிவு: ஆய்வுக்கு பின்னர் தான் பக்தர்களுக்கு அனுமதி..!

Siva

, ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (08:40 IST)
திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்படும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், ஆய்வுக்கு பின்னர் தான் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையில் மகா தீபம் டிசம்பர் 13ஆம் தேதி ஏற்றப்பட இருக்கும் நிலையில், மண்சரிவு காரணமாக மகா தீபத்தின் போது மலைக்குச் செல்லும் 2500 பக்தர்கள் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், வனத்துறையினர் அண்ணாமலையார் மலை மீது ஆய்வு செய்ததாகவும், ஆய்வுக்கு பின் மலையேறும் முக்கிய பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டு புதைக்குழி போல் காட்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, மலையேறும் அனைத்து பாதைகளும் மண் சரிந்து உள்ள ஆபத்தான சூழலில் 200 அல்லது 300 டன் எடை கொண்ட பாறைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை கொண்டு செல்லும் பாதைகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், தீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இன்று மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றும், ஆய்வுக்கு பின்னர் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து தெரியவரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வந்தே பாரத் ரயில் கதவுகள் திறக்கவில்லையா? பயணிகள் இறங்க முடியாமல் தவிப்பு..!