திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 27ம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தீபத் திருவிழாவை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தீபத் திருவிழா எளிய முறையில் கோவிலுக்கு உள்ளேயே நடத்தப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நவம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சிகர நிகழ்வாக டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை மகாதீப தரிசனமும் நடைபெற உள்ளது.