Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 ஆண்டுகளில் சீமைக் கருவேலம் மரங்களை அப்புறப்படுத்த கால நிர்ணயம்!

trees
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:22 IST)
10 ஆண்டுகளில் சீமைக் கருவேலம் மரங்களை அப்புறப்படுத்த கால நிர்ணயம்!
தமிழ்நாட்டில் சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தலைமை வன பாதுகாவலர் சையது முசாமில் அப்பாஸ் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்
 
இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘தமிழ்நாட்டில் சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்கவும் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் பரவியுள்ள 196 வகையான அந்நிய மரங்களில் 23 வகையை அப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்லது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பல்லோவின் 9 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பிய ஆறுமுகச்சாமி ஆணையம்!