ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணை செல்லும் என கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்ததால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதனையடுத்து மாணவிகள் சார்பில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டுமென ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது
இந்த தீர்ப்பில் ஹிஜாப் என்பது இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அவசியம் கிடையாது என்றும் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கர்நாடக அரசின் ஹிஜாப் தடை அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாகவும் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது