இன்றிரவு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை எச்சரிக்கை

Mahendran
வியாழன், 11 செப்டம்பர் 2025 (16:43 IST)
இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில் இன்று இரவு 7 மணி வரை, 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும்,  சில பகுதிகளில் சாலைகள் வழுக்கும் தன்மை கொண்டதாக மாறி, போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும், எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments