பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

Siva
வியாழன், 11 செப்டம்பர் 2025 (16:35 IST)
தமிழ்நாடு காவல்துறைக்கு பொறுப்பு டி.ஜி.பி.யை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, "உச்ச நீதிமன்றம் ஏற்கனவே யூ.பி.எஸ்.சி-க்கு (Union Public Service Commission) இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை," என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
 
டி.ஜி.பி. பொறுப்பு காலியாக இருந்த நிலையில், தற்காலிகமாக பொறுப்பு டி.ஜி.பி.யை நியமித்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு சுட்டிக்காட்டியது.
 
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, டி.ஜி.பி. பதவிக்கான நிரந்தர நியமனம் யூ.பி.எஸ்.சி.யின் பரிந்துரையின்படிதான் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்படும்போது, பொறுப்பு நியமனத்திற்கு எதிரான மனுக்கள் செல்லாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments