Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாநிலங்களவை தேர்தல்: முக ஸ்டாலின் தேர்வு செய்த வேட்பாளர்கள் யார் யார்?

Advertiesment
மாநிலங்களவை தேர்தல்: முக ஸ்டாலின் தேர்வு செய்த வேட்பாளர்கள் யார் யார்?
, திங்கள், 2 மார்ச் 2020 (06:42 IST)
மாநிலங்களவை தேர்தல்
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கடந்த சில நாட்களாக வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்யும் பணியில் இருந்தது. அதிமுக தரப்பில் கூட்டணி கட்சிகள் ஒரு எம்பி பதவியை கேட்டு வந்தபோதிலும், அதிமுக அதற்கு இணங்கவில்லை. திமுகவுக்கு இந்த பிரச்சனையே எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். ஏற்கனவே மாநிலங்களவை எம்பி இருந்து வரும் திருச்சி சிவா மற்றும் என் ஆர் இளங்கோ ஆகியோர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி பதவி முடிய உள்ள  இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் மூன்றாவதாக அந்தியூர் செல்வராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் அந்தியூர் தொகுதியில் கடந்த 1996ல் எம்எல்ஏ ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது முன்னாள் அமைச்சரான அந்தியூர் செல்வராஜ் திமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் இளைஞரணியில் இருந்து ஒருவர் எம்பி வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என திமுக வட்டாரங்கள் கூறிய நிலையில் தற்போது இளைஞர் அணிக்கு எந்த பதவியும் கொடுக்கப்படாமல் இருப்பது இளைஞரணி தலைவர் உதயநிதியை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடரும் மீன் மார்க்கெட் ரெய்டு: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி உத்தரவு!