Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

#Hbd_இலவுகாத்தகிளி: பிறந்தநாள் அதுவுமா ஸ்டாலினை டிரோல் செய்யும் நெட்டிசன்கள்!

Advertiesment
#Hbd_இலவுகாத்தகிளி: பிறந்தநாள் அதுவுமா ஸ்டாலினை டிரோல் செய்யும் நெட்டிசன்கள்!
, ஞாயிறு, 1 மார்ச் 2020 (11:12 IST)
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திமுக தலைவர் ஸ்டாலினை இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். 
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 67ஆவது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால்  தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துட்டார். தன்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் எனவும் அவர் தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். 
 
ஆனால், சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Hbd_இலவுகாத்தகிளி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என நினைப்பது ஆனால் அது நடக்காமல் தட்டிப்போவதையே இவ்வாறு குறிப்பிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸா? – ரசிகர்கள் அதிர்ச்சி! ஜாக்கி சான் விளக்கம்!