Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெயரை மாற்றி பல திருமணம் செய்து மோசடி! சீர்காழியை கலக்கிய மோசடி ராணி!

Advertiesment
பெயரை மாற்றி பல திருமணம் செய்து மோசடி! சீர்காழியை கலக்கிய மோசடி ராணி!

Prasanth Karthick

, திங்கள், 27 ஜனவரி 2025 (10:49 IST)

பெண் ஒருவர் பல்வேறு பெயர்களில் ஆண்களை மயக்கி திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே உள்ள திட்டை பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன். இவரது தயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அந்த மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிவதாக கூறி நிஷாந்தி என்ற பெண் சிவச்சந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார். இருவருக்கும் காதல் உண்டான நிலையில் கடந்த 20ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

 

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலான நிலையில் சீர்காழி அருகே உள்ள புத்தூர் வாய்க்காங்கரை பகுதியை சேர்ந்த நெப்போலியன் என்பவர் காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் அவர் சமீபத்தில் திருமணமான நிஷாந்தி என்ற பெண்ணின் உண்மையான பெயர் மீரா என்றும், அந்த பெண்ணை தான் 2107ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டதாகவும், ப்ன்னர் சென்னையில் வசித்து வந்த நிலையில் அவர் ஒன்றும் சொல்லாமல் தன்னை விட்டு சென்று விட்டதாகவும், எனவே தன்னை ஏமாற்றிய மீரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் அவர் பெயர் நிஷாந்தியும் இல்லை, மீராவும் இல்லை, லெட்சுமி என தெரிய வந்துள்ளது. இந்த லெட்சுமி, சிலம்பரசன் என்பவரை திருமணம் செய்து இவர்களுக்கு இரண்டு குழந்தையும் இருந்துள்ளது. சில வருடங்களில் கணவன் இறந்த நிலையில் குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்த லெட்சுமி, இதுபோன்ற திருமண மோசடி சம்பவங்களை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

 

இதுத்தொடர்பாக பலரும் அளித்த புகாரின் பேரில் லெட்சுமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலையாள படத்தை பார்த்து செய்தேன்: மனைவியை கொன்று குக்கரில் சமைத்தவன் வாக்குமூலம்..!