Publish Date: Fri, 03 Apr 2020 (17:25 IST)
Updated Date: Fri, 03 Apr 2020 (17:30 IST)
ஒரே சமயத்தில் பல சாதனங்களில் லாக் இன் செய்யும் அப்டேட்டினை வாட்ஸ் ஆப் வழங்க இருக்கிறது.
வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சமீபத்தில் வாஸ்ட் ஆப் வீடியோ ஸ்டேட்டஸ் நேரத்தை 30 விநாடிகளில் இருந்து 15 விநாடிளாக குறைத்தது.
இதைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் பல சாதனங்களில் லாக் இன் செய்யும் அப்டேட்டினை வாட்ஸ் ஆப் வழங்க இருக்கிறது. இந்த் ஆப்டேட் மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் என வெவ்வேறு சாதனங்களில் ஒரே அக்கவுண்டடை லாக் இன் செய்யலாம்.
இந்த அப்டேட் தற்போது அனைவருக்கும் வழங்கப்படவில்லை. விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.