Publish Date: Fri, 27 Feb 2026 (14:02 IST)
Updated Date: Fri, 27 Feb 2026 (14:05 IST)
தேர்தலில் நிரந்தர நண்பனும் இல்லை.. நிரந்தர எதியும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஒரு கட்சியில் இருக்கும் போது ஒருவரை திட்டுவதும் அதே கட்சியில் சேர்ந்த பின் திட்டியவரை கொண்டாடுவதும்.. இப்போது இல்லை.. அரசியல் துவங்கியது முதலே தொடங்கிவிட்டது..
ஒரே நிமிடத்தில் ஊழல்வாதி புனிதராகி விடுவார்.. ஒரே நிமிடத்தில் ஒரு புனிதர் ஊழல்வாதியாக மாறிவிடுவார்.. இது சம்பந்தப்பட்ட அந்த அரசியல்வாதி எந்த கட்சியில் இருக்கிறார் என்பதை பொறுத்து அது அமையும். அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை தன்னை திமுகவில் இணைத்து அதிமுகவின் தீவிர தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.. அதேபோல், அவரை திமுகவுக்கு வரவேற்று திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
இந்நிலையில்தான், 2018ம் வருடம் ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்த போது, அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் போட்ட பதிவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிரான சொத்துக் குறிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்.. ஊழல் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் ஓ பன்னீர்செல்வம் உடனடியாக பதவி விலக வேண்டும்.. பதவி விலக மறுத்தால் அவரை நீக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்...
8 வருடங்கள் கழித்து ஓபிஎஸ் தற்போது திமுகவில் சேர்ந்துள்ள நிலையில் முக ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர்.. பண்பானவர்... அடக்கமானவர்.. அவரது வரவு நல்வரவாகட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும் என பதிவிட்டிருக்கிறார்..
இந்த இரண்டு ஸ்கிரீன்ஷாட்டையும் எடுத்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்...