Publish Date: Mon, 25 Dec 2023 (10:47 IST)
Updated Date: Mon, 25 Dec 2023 (10:48 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமர் போல் நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்பு நிவாரணம் குறித்த நம்முடைய கோரிக்கையை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்று கூறிய திருமாவளவன் தமிழ்நாட்டிற்கு 21,000 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்ட நிலையில் மத்திய அரசு இதுவரை தனது பங்கிற்கு ஒரு பைசா கூட தமிழ்நாட்டிற்கு தரவில்லை.
அதுமட்டுமின்றி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தன்னை ஒரு பிரதமராக நினைத்துக் கொண்டு பேசுவதை போல ஒரு தொனியை வெளிப்படுத்தி உள்ளார். இது ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ளார்.
மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டியடிப்போம் என பெரியாரின் நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.