Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

இந்திய, அமெரிக்க தேர்தல்களில் வெற்றி பெறுவது யார்? நியூ நோஸ்ராடாமஸ்’ கணிப்பு..

Advertiesment
அமெரிக்கா
, திங்கள், 25 டிசம்பர் 2023 (07:37 IST)
இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்து இங்கிலாந்தை சேர்ந்த ‛நியூ நோஸ்ராடாமஸ்’ என பெயர் பெற்ற கிரேக் ஹாமில்டன் கணித்துள்ளார்.

ஏற்கனவே இவரது முந்தைய கணிப்புகள் சரியாக நடந்துள்ள நிலையில் 2024ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் மோடி வெற்றி பெறுவார் என்றும், இந்தியாவின் பிரதமராக உள்ள நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என்றும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மூலம் மீண்டும் அவரே பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்றும் நியூ நோஸ்ராடாமஸ் கணித்துள்ளார்,.

அதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலை தாமதப்படுத்துவதற்கான செயல்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடையும் என்றும், இந்த தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் என்றும் அவரது வெற்றிக்கு கறுப்பின பெண் ஒருவர் உதவி செய்ய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

கிரேக் ஹாமில்டனின் முந்தைய பல கணிப்புகள் அப்படியே நடந்துள்ள நிலையில் இந்த இரண்டும் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை.. ஏசு பிறந்த பெத்லகேமில் மட்டும் சோகம்..!