Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்ப்பில் நேர்மையில்லை என தோன்றுகிறது: பொன்முடி வழக்கு குறித்து திருமாவளவன்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (15:13 IST)
பொன்முடி வழக்கின் தீர்ப்பில் நேர்மை இல்லை என தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
அயோத்தி பாபர் மசூதி வழக்கு உள்பட பல வழக்குகளில் நீதி என்ற பெயரால்  மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும்  ஜம்மு காஷ்மீரில் அரசியல் அமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டது தொடர்பாக நடந்த வழக்கிலும் அளிக்கப்பட்ட தீர்ப்பு என்பது விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தீர்ப்பு அல்ல  
 
அப்படித்தான் பொன்முடி வழக்கையும் இன்றைக்கு பலரும் உற்று நோக்குகிறார்கள். ஏனென்றால் இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில்  தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு,  இது மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கல்ல,  நீதிபதி ஜெயச்சந்திரன் அவரே எடுத்துக்கொண்டு விசாரித்த ஒரு வழக்கு.  
 
அவர் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர். இந்த வழக்கு பொன்முடி மீது பதிவு செய்ய அவரும் ஒரு காரணமாக ஆவணங்களை சேகரித்த வழக்கு. எனவே இந்த வழக்கின் தீர்ப்பில் தீர்ப்பில் நேர்மையில்லை என தோன்றுகிறது என திருமாவளவன் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments