நடிகர்கள் அரசியலுக்கு வருவது வரும் சாபக்கேடு தமிழகத்தில் மட்டும் தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல நடிகர்கள் அரசியலுக்கு வருவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஜயகாந்த், டி ராஜேந்தர், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் தனி கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர திட்டமிட்டனர் என்பதும் ரஜினி மற்றும் திடீரென கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் விஜய் விஷால் உள்பட பல நடிகர்கள் அரசியல் ஆசையுடன் உலா வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் எம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் கிடைத்த புகழ் இருந்தால் போதும் முதல்வர் ஆகிவிடலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர் என்றும் மக்களுக்கு தொண்டு செய்ய, கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் அவர் தெரிவித்தார்.