Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியார் துறையில் இட ஒதுக்கீடு, ஆளுநர் பதவி ஒழிப்பு: திருமாவளவன் முன்மொழிந்த தீர்மானங்கள்..!

தனியார் துறையில் இட ஒதுக்கீடு, ஆளுநர் பதவி ஒழிப்பு:  திருமாவளவன் முன்மொழிந்த தீர்மானங்கள்..!

Siva

, வெள்ளி, 26 ஜனவரி 2024 (20:22 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சியில் நடத்திய 'வெல்லும் சனநாயகம்' மாநாட்டில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு, ஆளுநர் பதவி ஒழிப்பு உள்பட 33 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதில் சில முக்கிய தீர்மானங்கள் இதோ:
 
பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் மத்திய அரசை ஆதரவு வழங்க வலியுறுத்துவது
 
முழுதாகக் கட்டி முடிக்கப்படாத ராமர் கோயிலைத் திறந்து அரசியல் ஆதாயம் தேடும் பா.ஜ.க அரசின் நடவடிக்கையை கண்டிப்பது
 
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசை வலியுறுத்துவது,
 
இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவது
 
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திட உத்தரவிட வலியுறுத்துவது
 
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்துவது
 
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவது
 
வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க வலியுறுத்துவது
 
ஆளுநர் பதவியை ஒழிப்பது
 
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வலியுறுத்துவது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்.!