Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதி பேரன் உதயநிதி ஸ்டாலின் என்பதில் உங்களுக்கு வேணா சந்தேகம் இருக்கலாம் எங்களுக்கு இல்லை-முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு....

கருணாநிதி பேரன் உதயநிதி ஸ்டாலின் என்பதில் உங்களுக்கு வேணா சந்தேகம் இருக்கலாம் எங்களுக்கு  இல்லை-முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு....

J.Durai

, வியாழன், 24 அக்டோபர் 2024 (08:20 IST)
மதுரை புறநகர், மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய  அதிமுக சார்பில்,  திருவேடகம், தென்கரை, மன்னாடி
மங்கலம், குருவித்
துறை, பால
கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கிய 
பின்பு கலந்தாய்வுக் கூட்டம், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
 
கூட்டத்திற்கு, வாடிப்பட்டி தெற்கு
ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
 
இந்த கூட்டத்தில், கலந்து
கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் பேசுகையில்.....
 
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில்
கன மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் தேங்காத சாலைகளே இல்லை இதை சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்று கேட்டால் அனு
மதிப்பதில்லை.
 
உதயநிதி சொல்றாரு நான் கருணாநிதி பேரன் சொன்னதை வாபஸ் வாங்க மாட்டேன் என்று கூறுகிறார். 
 
நீங்கள் கருணாநிதி பேரன் என்பதில் உங்களுக்கு வேணா சந்தேகம் இருக்கலாம், எங்களுக்கு இல்லை. திரும்பத்
திரும்ப 
ஏன் இதை சொல்
கிறீர்கள் என, தெரியவில்லை.
 
ஏனென்றால், கருணாநிதி பேரன் என்பதால் தானே துணை முதலமைச்சர் ஆனீங்க .
இன்னைக்கு விலைவாசி உயர்ந்திருக்கு  பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் 
இலவச சைக்கிள் கொடுத்து மக்களை ஏமாற்று
கிறார்கள். 
 
யாரிடம் இந்த நாடகம் போடுறீங்க உங்களின் ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. அதற்காக எடப்பாடி தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி மலரும். 
 
தாத்தா முதலமைச்சர், அப்பா அமைச்சர், இப்போது அவரது மகனான உதயநிதியும் அமைச்சர்.
 
பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார், முதல்வரின் மகனும் மருமகனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி ஊழல் செய்து மறைத்து வைத்
திருக்கிறார்கள் என்று சொல்கிறார். இதை நான் சொல்
லவில்லை உங்களது அமைச்
சரவையில் அமைச்சராக இருக்கிற பி .டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார். 
 
அவர் பேசிய ஆடியோவை வெளியிட நீங்கள் தயாரா,இதுகுறித்து பேசினால் என் மீது வழக்கு போடுங்கள் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். சபரீசனும் உதயநிதியும் கொள்ளை அடித்
திருக்கிறார்கள் என்று உங்கள் அமைச்
சரவையில் உள்ள அமைச்சரே சொல்கிறார்.
 
திராணி இருந்தால் அவர் சொன்ன வீடியோவை வெளியிட்டு இருக்கலாமே.
தற்போது, தமிழகம் போதை பொருள்களின் கிடங்காக மாறி உள்ளது தினசரி 2000 கோடி 3000 கோடி என்று போதைப் பொருள் வர்த்தகம் நடைபெறுகிறது.
 
இளைஞர்களின் வாழ்வு சீர்
குலைந்துள்ளது. ஆகையால் ,
இந்த அரசை தூக்கி எறியும் காலம் வெகு தூரம் இல்லை எடப்பாடி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி மலரும்
என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெக மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர் கட்-அவுட்டுகள்.. விஜய்யின் நோக்கம் என்ன?