Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த ஆசை நிறைவேறாது – ஸ்டாலினுக்கு ஆதரவாக திருமாவளவன் !

Advertiesment
அந்த ஆசை நிறைவேறாது – ஸ்டாலினுக்கு ஆதரவாக திருமாவளவன் !
, திங்கள், 9 செப்டம்பர் 2019 (08:41 IST)
ப சிதம்பரம் போல திமுக தலைவர் ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்ற பாஜக தலைவர்களின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது தற்போது வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதைப் பற்றிப் பேசிய பாஜக வின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா சிதம்பரத்துக்கு நேர்ந்த கதிதான் எதிர்க்கட்சி தலைவருக்கும் என மிரட்டும் விதமாகக் கூறினார்.

இதற்கடுத்த நாள் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ‘சிதம்பரம் கைதுக்குப் பின் ஸ்டாலின் மத்திய அரசை மென்மையாக விமர்சிக்கிறார்’ எனக் கூறினார். இதையடுத்து ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி தமிழக அரசியல் சூழலில் எழுந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் திமுக கூட்டணியில் உள்ளவருமான தொல் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று பேசிய அவர் ‘ஸ்டாலினைக் கைது செய்யவேண்டும் என்பது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால் அது நிறைவேறாது’ எனத் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புகழேந்தி விக்கெட்டுக்கும் அவுட்டா? காலியாகும் தினகரன் கூடாரம்