Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரில் கருணாநிதிக்கு கவிதாஞ்சலி: நெகிழ்ச்சி சம்பவம்

Advertiesment
கரூரில் கருணாநிதிக்கு கவிதாஞ்சலி: நெகிழ்ச்சி சம்பவம்
, வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (17:04 IST)
முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 07 ம் தேதி மாலை மரணம் அடைந்தார். இதனையொட்டி பல்வேறு இடங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், கரூர் திருக்குறள் பேரவையின் சார்பில் கலைஞருக்கு கவிதாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது.



கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மேலும் முனைவர் அருணா பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கவிஞர் கருவூர் கன்னல், முனைவர் கடவூர் மணிமாறன், குறளகன், புலவர் குழந்தை, குமாரசாமி என்று கரூர் மாவட்டத்தினை சார்ந்த புலவர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதியின் புகழ்களை கவிதைகள் மூலம் பாடி, கவிதாஞ்சலி செலுத்தினர்.

மேலும், கலைஞர் கருணாநிதியின் எண்ணப்படி, திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்பதனை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் வருங்காலத்தில் தமிழுடைய இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்களிலும் சிறந்த அறிஞர் பெருமக்களுக்கும் சிறப்பு செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து, கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் செய்தியாளர்களை சந்தித்த போது., கலைஞர் கவிதாஞ்சலி நிகழ்ச்சியில், கவிஞர்கள் சூழ நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கவிஞர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை, அவர்களுடைய தமிழ் பற்றும் ஆகியவற்றை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வீடியோவை காண


பேட்டி : மேலை.பழநியப்பன் – நிறுவனத்தலைவர் – கரூர் திருக்குறள் பேரவை - கரூர்

சி.ஆனந்தகுமார்



 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…