கொரொனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து தொழில்துறையினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில தொழில்துறையினர் இயங்க பொதுமுடக்கத்தை தளர்த்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முதல் சினிமாப் படங்களுக்காக போஸ்ட் புரொடெக்சன் பணிகளை மேற்கொள்ள உத்தரவு அளித்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் சினிமாத்துறையும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே, நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் ஹரி, நடிகர் ஹரிஸ் கல்யாண் ஆகியோர் தங்கள் சம்பளத்தில் 25 % குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ், 2020 ஆண்டில் என்னுடைய நடிப்பிற்கு சம்பளம் வேண்டாம் என கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
‘எனக்கு வாய்ப்புக் கொடுப்பது இயக்குநர்கள் என்றாலும் கூட எனக்கு சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளரக்ள் எனும் முதலாளிகள் தான் !மேலும் தான பலகோடிகள் வாங்குன் நடிக்ன் இல்லை என்றாலும் எனக்கும் தேவைகள் உள்ளது. ஆனால் என்னிடம் உள்ள பொருளாதாரத்தைக் கொண்டும் சில நண்பர்களிடம் உதவிகள் கேட்டும் எனால் சில மாதங்கள் சமாளிக்க முடியும். அதனால் திரையுகல முதலாளிகளுக்கு கைம்மாறாக என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதில் எனக்கு மன நிறைவையே தருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.