மதுரையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றை மர்மநபர்கள் சிலர் கொளுத்தியதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் மே 7 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்களில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை ஆகியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்றம் பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என அறிவித்தது.
இதையடுத்து மதுரை தபால் தந்தி நகரிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சில மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பியோடினர். டாஸ்மாக் கடையில் பற்றிய தீ மளமளவென பக்கத்துக் கடைகளுக்கும் பரவியுள்ளது. தீயணைப்புத் துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் கூறப்பட, தீயணைப்புப் படையினர் தீயை அணைத்துள்ளனர்.