Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகத்திலேயே திமுக போன்று கட்டமைப்பு உள்ள கட்சி கிடையாது: முதல்வர் ஸ்டாலின்..!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (09:54 IST)
உலகத்திலேயே திமுக போன்று கட்டமைப்பு கொண்ட கட்சி எங்கும் கிடையாது என்றும் எந்த சக்தியாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
சேலம் மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியபோது ’வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்றும் சேலத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு தான் அமித்ஷா சென்னை வருகிறார் என்றும் பாஜகவின் செல்வாக்கு நாடு முழுவதும் சரிந்து வருகிறது என்றும் ஒன்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக கொண்டு வந்த திட்டங்களை அமைச்சா பட்டியலிட தயாரா என்றும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனம் வரவில்லையா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 
 
மேலும் பாஜகவிற்கு அதிமுக பல்லாக்கு தூக்குகிறது என்றும் அதிமுகவை நம்பி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பாஜக இறங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கான் மகன்கள் பாகிஸ்தானில் நுழைய தடையா? 2 வார்த்தைகளால் ஏற்பட்ட சிக்கல்..!

2011 தேர்தலை போல் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுக இழக்கும். அதிமுக சரவணன்..!

விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான்.. சபாநாயகர் அப்பாவு

இப்பவாச்சும் பேசினாரே.. ரஜினிகிட்ட போன்ல பேசி தேங்க்ஸ் சொன்னேன்: அமைச்சர் துரைமுருகன்

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டலா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments