Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''மாணவர்களின் எதிர்காலம் இந்த அரசின் மெத்தனப் போக்கால் கேள்விக்குறியாகி உள்ளது?''- எடப்பாடி பழனிசாமி

''மாணவர்களின் எதிர்காலம் இந்த அரசின் மெத்தனப் போக்கால் கேள்விக்குறியாகி உள்ளது?''- எடப்பாடி பழனிசாமி
, வெள்ளி, 9 ஜூன் 2023 (19:53 IST)
அயராத உறுதியாலும் உழைப்பாலும் தாங்கள் சார்ந்துள்ள விளையாட்டிற்காக தங்களை முழுமையாக கட்டமைத்துக் கொண்டு, தயார் செய்திருந்த மாணவர்களின் எதிர்காலம் இந்த அரசின் மெத்தனப் போக்கால் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது?  என்று முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

‘’School Games Federation of India, பள்ளி மாணாக்கர்களுக்காக வருடந்தோறும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வழக்கம், இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படும் Form-4 சான்றிதழ்கள் விளையாட்டு வீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுடன், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறவும் வாய்ப்பாக அமையும்.

இந்நிலையில் கடந்த ஆண்டு SGFI 301மாணவர்களுக்கு வாய்ப்பளித்து அனுப்பிய அறிக்கையை இந்த விடியா திமுக அரசு முறையாக கையாளாமல் பாராமுகமாக இருந்ததன் விளைவாக இன்றைக்கு தமிழக மாணவர்கள் விளையாட்டுத் துறையில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர்.

அயராத உறுதியாலும் உழைப்பாலும் தாங்கள் சார்ந்துள்ள விளையாட்டிற்காக தங்களை முழுமையாக கட்டமைத்துக் கொண்டு, தயார் செய்திருந்த மாணவர்களின் எதிர்காலம் இந்த அரசின் மெத்தனப் போக்கால் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது?

தனது நிர்வாகத் திறமையின்மையால் விளையாட்டுத் துறையில் தமிழக மாணவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பை கிடைக்கவிடாமல் செய்த இந்த கையாளாகாத அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு காரணமான பள்ளி கல்வித்துறை அமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சரும் இனிவரும் காலங்களிலாவது  தங்கள் துறை சார்ந்த பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல அரசியல் கட்சியில் இணைந்த சென்னை கிங்ஸ் முன்னாள் வீரர்