Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

Advertiesment
RP Udayakumar

Senthil Velan

, சனி, 6 ஜூலை 2024 (18:45 IST)
எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை துரோகி என்ற வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாகரிகமில்லாத அரசியல் பண்பாட்டை தொடர்ந்து விதைத்து வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்று விமர்சித்தார். பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என உழைத்து உத்தமர்களை திட்டமிட்டு ஒதுக்கி வைத்துள்ளார் என்று அவர் குற்றம் சாட்டினார். 

அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த அண்ணாமலை தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகிறார் என்றும் மோடி அருகில் பழனிசாமியை உட்கார வைத்துவிட்டு இங்கு அதிமுகவை அசைத்துப் பார்க்கும் வேலையில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார் என்றும் ஆர்.பி உதயகுமார் குறிப்பிட்டார்.
 
அதிமுகவை பற்றி அண்ணாமலைக்கு என்ன கவலை என கேள்வி எழுப்பிய அவர், அதிமுக வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் வார்த்தையை கொட்டுகிறார் என்று கூறினார். துரோகி என்ற வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெற வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.


அண்ணாமலை பேசியதை வாபஸ் வாங்கவில்லை என்றால் எவ்வித போராட்டமும் நடத்த அதிமுக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று ஆர்.பி உதயகுமார் எச்சரித்தார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!