Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாமிரபரணி ஆற்றில் தீடீரென்று தோன்றிய சிவப்பு நிறம்..மக்கள் அச்சம்

Advertiesment
தாமிரபரணி ஆற்றில் தீடீரென்று தோன்றிய சிவப்பு நிறம்..மக்கள் அச்சம்
, சனி, 23 மே 2020 (23:05 IST)
தாமிரபரணி ஆற்றில் தீடீரென்று தண்ணீர் சிவப்பு நிறமான மாறியதால் பொதுமக்கள் குடிநீரைக் குடிப்பதற்கு பயப்படுவதால் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தாமிரபரணி குடிநீர் ஏன் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கியுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைப் பகுதியான பூங்குளத்தில் தாமிர பரணி ஆறு உற்பத்தியாகிறது.

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக ஓடி புன்னக்காயம் என்ற இடத்தில் தமிழக எல்லையில் கலக்கிறது.

இந்த நீர் இருமாவட்ட மக்களின் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பயன் படுகிறது நீர் சிவப்பாக மாறியுள்ளதால் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து தூத்துகுடியைச் சேர்ந்த எம்பவர் எனவ்ர் சுற்றுச்சூழல் அமைப்பி இயக்குநர் மற்றும் தமிழக மனித உரிமை ஆணையத்தில்  புகார் அளித்துள்லார்.

தற்போது நெல்லை மாவட்ட  ஆட்சியர்  ஷில்பா பிரபாகர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாமிர பரணியில் குறைவான நீர் காணப்படுவதால் குடிநிரீ மற்றும் விவசாய தேவைகளுக்காக பாபநாசம் அனையில் இருந்து  மதகில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

அதிலுள்ள சேறு,   மக்கிப்போன மரங்கள் போன்றவைகளால் தண்ணீஇர் நிறம் மாறியுள்ளது. பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது - ஹெச்.ராஜா