மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு ?

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (17:25 IST)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கியது. அதில் மனுவை தாக்கல் செய்த முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது சொத்துமதிப்புகளை பதிவு செய்தனர். அதில்  கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலில் இதோ... 
 
‘கையிருப்பு தொகையாக ரூ.50 ஆயிரமும், தனது மனைவி துர்கா ரூ.25 ஆயிரமும் கையிருப்பு வைத்திருக்கிறார்கள். துர்காவிடம் ரூ.24 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான 720 கிராம் தங்க நகைகள் உள்ளது. மு.க.ஸ்டாலினிடம் ரூ.4 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 792 மதிப்பிலான அசையும் சொத்துகளும், துர்காவிடம் ரூ.30 லட்சத்து 52 ஆயிரத்து 854 மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளன.
 
மு.க.ஸ்டாலின் பெயரில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 410 மதிப்பிலான அசையா சொத்துகளும், துர்காவிடம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 283 மதிப்பிலான அசையா சொத்துகளும் இருக்கிறது. மு.க.ஸ்டாலின் மீது 47 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments