Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய - மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள திட்டங்கள் ஒடுக்கப்பட்ட சமூக மக்களை முழுவதுமாக சென்று சேரவில்லை - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு!

Advertiesment
மத்திய - மாநில அரசுகள்  கொண்டு வந்துள்ள திட்டங்கள் ஒடுக்கப்பட்ட சமூக மக்களை முழுவதுமாக சென்று சேரவில்லை - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு!

J.Durai

, வியாழன், 24 அக்டோபர் 2024 (08:26 IST)
ஆதிதிராவிடர் வணிக மற்றும் தொழில் வளர்ச்சிக் கூட்டமைப்பின் சார்பில் காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற எஸ்.சி., எஸ்.டி. பொருளாதார விடுதலை மாநாட்டில், சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு மாநாட்டை தொடக்கி வைத்தார்.
 
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய  துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்....
 
கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தோர் உலகளவில் கல்வி, ஆராய்ச்சித்துறைகளில் முன்னிலையில் உள்ளனர். கல்வி கற்றதன் பயனாக வேலைவாய்ப்பு, சிவில் சர்வீஸ் உயர் பதவி அடைந்துள்ளனர். அரசியலிலும் இதை பார்க்க முடிகிறது. ஆனால், தொழில்துறை, முதலீடு, தொழில் நிறுவனர்களில் மிக குறைவாகவே உள்ளனர்.
 
பின்தங்கிய சமூகத்தில் இருந்து வந்தோர் தொழில்முனைவோராக வரகூடாதா - வளர்ச்சியடைய கூடாதா என்ற கேள்வி எழுகிறது. ஏன் வரமுடிவதில்லை என்ற கேள்வியும் கேட்க தோன்றுகிறது. ஏனெனில் பலரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எந்தவொரு சமுதாயமும் பொருளாதார ரீதியில் பலன்அடையும் போதுதான் ஒரு நிலையான வளர்ச்சி நோக்கி நகர முடியும்.
பொருளாதாரத்தில் சமூகம் வளர தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கும். தொழில்துறையில் வெற்றி பெற்றால்தான் சமுதாயத்தில் வளர்ச்சி உறுதி செய்ய முடியும்.
 
அனைத்து சமூகங்களும் உள்ளங்கிடய ஒருங்கிணைந்த வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும்.
மத்திய, மாநில அரசுகளின் தொழில் வளர்ச்சி திட்டங்களும் பொதுவாக நாட்டின் பொருளாதாரவளரச்சி இலக்காக கொண்டுதான் செயல்படுகிறது.
ஆனால், மத்திய மாநில அரசுகள்  கொண்டு வந்துள்ள திட்டங்கள் ஒடுக்கப்பட்ட சமூக மக்களை முழுவதுமாக சென்று சேரவில்லை என்பது குறையாக பதிவு செய்கிறேன். சிஐஐ, பிக்கி, சேம்பர் ஆப் காமர்ஸ் ஆகிய அமைப்புகளில் தனியாக எஸ்.சி, எஸ்.டி பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.
இச்சமூகத்தில் தொழில்முனைவோர் ஆனவர்கள் தங்கள் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ளோர் இத்துறையில் வளர உதவ வேண்டும்.
 
அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் வளர முடியும்.
சிறப்புக்கூறு நிதி திட்டத்தில் மத்திய அரசு திட்டத்தில் தொழில்துறை மேம்பாடு, சுயவேலைவாய்ப்பு பெற முடியும். முத்ரா வங்கி கடன் திட்டம் வரப்பிரசாதம். குறிப்பிட்ட சதவீத கடன் எஸ்.சி, எஸ்.டி பயனாளிகளுக்கு தர உத்தரவு உள்ளது. திறன்மேம்பாடு திட்டமும் உள்ளது. திறனை மேம்படுத்த உதவும். 
 
மத்திய மாநில அரசு திட்டங்களை பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சி பெற முடியும் என்று குறிப்பிட்டார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக ஆளுநரின் விரோத செயல்பாட்டை கண்டித்து பொது மக்களே கொந்தளித்து தீர்வுகாண்பார்கள் -தமிழ் தேசிய தலைவர் பழ.நெடுமாறன் பேச்சு......