Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுச்சேரி அரசு சலுகைகள் அளிப்பதால் புதிய தொழிற்சாலைகள் தொடங்க முதலீட்டாளர்கள் முன் வர வேண்டும்- முதலமைச்சர் ரங்கசாமி அழைப்பு!

புதுச்சேரி அரசு சலுகைகள் அளிப்பதால் புதிய தொழிற்சாலைகள் தொடங்க முதலீட்டாளர்கள் முன் வர வேண்டும்- முதலமைச்சர் ரங்கசாமி அழைப்பு!

J.Durai

, புதன், 9 அக்டோபர் 2024 (08:32 IST)
உலக தர நிர்ணய தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய தர நிர்ணய சென்னை கிளை சார்பில் உலக தர நிர்ணய தினம் கொண்டாடப்பட்டது.
தனியார் விடுதியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
 
தொடர்ந்து விழாவில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி.....
 
உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகளுக்கு எந்த சிரமும் இல்லாமல் தர நிர்ணய அமைப்பு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வங்கிகளில் இருந்து கடன் வாங்கி தொழில் தொடங்கும் போது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல் சரியான முறையில் தர நிர்ணய அமைப்பு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும்,  உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் தரமான பொருட்களை  உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர் வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிலை மாறி தற்போது இந்தியாவில் இருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மிகவும் பெருமையான விஷயம் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் 
விளம்பரத்தை பார்த்து மக்கள் ஏமாறாமல் தரமான பொருட்களை அவர்கள் வாங்க வேண்டும் என்றும்
பல புதிய தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பது எண்ணம் என்பதால் அரசு பல சலுகைகள் கொடுத்து புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எனவே புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க முதலீட்டாளர்கள் வர வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வான்படை சாகச நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு முறையாக முன் ஏற்பாட்டு பணிகளை மேற் கொள்ள வில்லை-ஜிகே. வாசன் பேச்சு......