வேலூர் மத்திய சிறையில் மத உரிமை மறுக்கப்படுகிறதா? சிறைத்துறை விளக்கம்..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (07:30 IST)
வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளின் மத உரிமை மறுக்கப்படுவதாக வெளியான தகவல் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.  
 
வேலூர் மத்திய சிறை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளும் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் மத வழிபாட்டை தொடரும் வகையில் சமமான மத வழிபாட்டு உரிமை பெற்றுள்ளனர் 
 
சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டு தளங்களும் சிறை விதிகளின்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
தமிழ்நாடு சிறை விதிகளுக்கு உட்பட்டு  எந்த மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளும் மத வழிபாடு அல்லது மதச் சடங்குகள் நடத்துவதற்காக பெரிய அளவில் கூட்டம் போடுவது அனுமதிக்கப்படவில்லை. 
 
ஆகவே அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளும் தங்களது மத வழிபாடு மற்றும் மதச் சடங்குகளை நிறைவேற்றிட சிறை துறையின் வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர் என்று சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments