Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தீஸ்கர், ராஜஸ்தான், ம.பியில் ஆம் ஆத்மி தனித்து போட்டி.. I.N.D.I.A கூட்டணிக்கு சிக்கலா?

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (07:22 IST)
சமீபத்தில் தொடங்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருக்கும் நிலையில் நடைபெற உள்ள ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால் I.N.D.I.A கூட்டணிக்குள் சிக்கல் எழுந்து உள்ளதாக கூறப்படுகிறது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில்  ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுவதாக கூறி இருப்பதால்  அந்த மாநிலங்களில் வலுவாக உள்ள காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.

 காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து I.N.D.I.A கூட்டணியின் சார்பில்  வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆம் ஆத்மி தனித்து நிற்க திட்டமிட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியும் வாய்ப்பிருப்பதால் பாஜக இந்த மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments