Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓபிஎஸ்ஸிடம் இருந்து எதிர்க்கட்க்சி துணைத்தலைவர் பதவியும் பறிப்பு?

ஓபிஎஸ்ஸிடம் இருந்து எதிர்க்கட்க்சி துணைத்தலைவர் பதவியும் பறிப்பு?
, திங்கள், 11 ஜூலை 2022 (16:28 IST)
ஓ. பன்னீர் செல்வத்திடம் இருந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியையும் பறிக்கத் திடமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்  இடையே நடைபெற்ற சர்ச்சையின் உச்சகட்டமாக என்று பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதுமட்டுமின்றி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அதிமுக அலுவலகம் முன் ஓபிஎஸ் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக அலுவலகம் அருகே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், ஓ. பன்னீர் செல்வத்திடம் இருந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும்  பொருளாளர் பதவியைப் பறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இ ந் நிலையில், பன்னீர் செல்வத்திடம் உள்ள எதிர்க்கட்சித்துணைத்தலைவர் பதவியைப் பறிக்கவுள்ளதாகவும் இதற்காக விரைவில் அதிமுக எம்.எல்.ஏக்கவின் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றக் உள்ளதாகவும் இதற்காக நடவடிக்கை எடுக்க எஸ்.பில் வேலுமனியிடன் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக பொதுகுழு கூட்டத்திற்கு நாள் குறித்து கொடுத்த ஜோதிடர் இவர்தான்!