Publish Date: Mon, 11 Jul 2022 (13:27 IST)
Updated Date: Mon, 11 Jul 2022 (13:31 IST)
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தர்ணா போராட்டம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் திடீரென தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே நடைபெற்ற சர்ச்சையின் உச்சகட்டமாக என்று பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்
அதுமட்டுமின்றி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தன்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அதிமுக அலுவலகம் முன் ஓபிஎஸ் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக அலுவலகம் அருகே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Mahendran
Publish Date: Mon, 11 Jul 2022 (13:27 IST)
Updated Date: Mon, 11 Jul 2022 (13:31 IST)