Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குஜாராத் கடித புரட்சி: மோடிக்கு எதிரான முதல் வெற்றி

Advertiesment
குஜாராத் கடித புரட்சி:  மோடிக்கு எதிரான முதல் வெற்றி
, செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (21:51 IST)
குஜராத்தில் விவசாயிகள் மோடிக்கும் பாஜக அரசுக்கு எதிராக முன்நடத்திய போராட்டத்தில் முதல் வெற்றி பெற்றுள்ளனர். 
 
புல்லட் ரயில் திட்டம் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் இயக்கப்பட இருந்தது. இந்த திட்டத்திற்கு மொத்தம் 1.60 லட்சம் கோடி செலவாகும் அதில் 1.10 லட்சம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு கடனாக கொடுக்க முன்வந்தது. 
 
ஆனால், இந்த திட்டத்தால் விவசாயிகளின் நிலம் பல கையக்கப்படுத்தப்படும், அதோடு விவசாயமும் பல மடங்கு பாதிக்கப்படும். எனவே, இந்த திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். 
 
இந்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், 1000-க்கும் அதிகமான விவசாயிகள் தனி தனியாக ஜப்பான் அரசுக்கு இந்த திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறித்து கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். 
 
இந்த கடிதங்களை கண்ட பிரகு புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. மோடியின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் மோடிக்கு எதிராக நடந்த இந்த புரட்சி பாஜகவினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பரங்குன்றத்தில் விஷால்? ஆர்.கே.நகர் மாறி ஆகாம இருந்தா சரி...