ஓயாமல் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை நமீதா - லேட்டஸ்ட் புகைப்படம்!

சனி, 7 செப்டம்பர் 2019 (12:28 IST)
நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.


 
தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது.  


 
பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து கட்டான உடல் தோற்றத்தை பெற கடந்த சில நாட்களாக கடுமையாக  முயற்சித்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஜிம்மில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படமொன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பலரையும் வியக்கவைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம் - அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் !