Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போடுங்க! - கேள்வி கணைகளைத் தொடுத்த செல்லூராரை சுற்றி வளைத்த அமைச்சர்கள்!

Prasanth Karthick
செவ்வாய், 18 மார்ச் 2025 (14:43 IST)

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பட்ஜெட் மீது பல கேள்விகளை எழுப்பினார்.

 

”அண்ணாவின் கோட்பாடுகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நிதிநிலை அறிக்கையில் ஒன்று கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்று செல்லூர் ராஜூ கூற, அதற்கு குறுக்கிட்டு பேசிய அமைச்சர் துரைமுருகன் “உங்களுக்கு தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்” என கிண்டல் செய்தார்.

 

தொடர்ந்து கேள்வி எழுப்பிய செல்லூர் ராஜூ கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவான நிதியே செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய நிலையில், பதில் அளித்த அமைச்சர் ஐ பெரியசாமி, அதிமுக ஆட்சியில் அறிவித்த பசுமை வீடு திட்டம் முழுமையாக செயல்படுத்தாமல் இருந்த நிலையில், அந்த திட்டத்தின் கீழ் நிறைவு செய்யாத வீடுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

 

தொடர்ந்து செல்லூர் ராஜூ, பள்ளி கட்டிடடங்கள் கட்டுவது, பேருந்துகள் வாங்கப்பட்டது குறித்த பல கேள்விகளை எழுப்பிய நிலையில் அந்தந்த துறை அமைச்சர்கள் அவரது கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments