Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதைப் பொருள் விவகாரம்..! விழித்துக் கொள்ளுமா திமுக அரசு..? அண்ணாமலை..!

Advertiesment
annamalai

Senthil Velan

, திங்கள், 11 மார்ச் 2024 (15:29 IST)
திமுக அரசு தனது தூக்கத்திலிருந்து விழித்து, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா அல்லது, ஜாபர் சாதிக்கைப் போல, தங்கள் கட்சிக்காரர் என்று கண்டுகொள்ளாமல் இருக்கப்போகிறதா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப்பொருள்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார்.
 
இதன் உச்சமாக, திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர்தான், சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தியும் சமீபத்தில் வெளிவந்தது என்றும் இன்றைய தினம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ ஹசீஸ் போதைப்பொருளும், 876 கிலோ கஞ்சாவும், சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
 
இத்தனை ஆண்டுகளாக, திமுக அரசு போதைப்பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவே, இத்தனை அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம் தமிழகத்தில் இருப்பதற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்
 
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் தங்குதடையின்றி இருந்து வந்திருக்கிறது என்பதையே, திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் பிடிபட்ட பிறகு, தற்போது சோதனைகளில் பிடிபடும் போதைப்பொருள்களின் அதிகபட்ச அளவு காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

 
போதைப்பொருள்கள் நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை உணர்ந்து, இனியாவது திமுக அரசு தனது தூக்கத்திலிருந்து விழித்து, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா அல்லது, ஜாபர் சாதிக்கைப் போல, தங்கள் கட்சிக்காரர் என்று கண்டுகொள்ளாமல் இருக்கப்போகிறதா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை இந்து நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது.-ப.சிதம்பரம்