Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 11 April 2025
webdunia

தன்னை நம்பி வந்த தொண்டர்களை கைவிட்ட கமலஹாசன்..! அண்ணாமலை கடும் விமர்சனம்..!!

Advertiesment
கமலஹாசன்

Senthil Velan

, ஞாயிறு, 10 மார்ச் 2024 (11:32 IST)
தன்னை நம்பி வந்த தொண்டர்களை கைவிட்டு திமுகவில் கைகோர்த்தார் கமல்ஹாசன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூத்த நடிகர்கள் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என கட்சியை ஆரம்பிக்கிறார்கள் என்றும் கமல்ஹாசன் திமுக பக்கத்தில் இணைந்துள்ளார் என்றும் கூறினார். 

எங்கு செல்ல வேண்டும் என்பது கமலஹாசனின் முடிவு என தெரிவித்த அண்ணாமலை,  திமுகவிற்கு மாற்றாக மய்யம் இருக்கும் என தன்னை நம்பி வந்த தொண்டர்களை  கமல்ஹாசன் கைவிட்டதாக விமர்சித்துள்ளார்.

கமல்ஹாசன் திமுகவின் நிலைப்பாட்டில் தான் செல்ல வேண்டும் என்பது கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களுக்கான ஒரே கட்சி பாஜக தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் மாற்றங்களை கொடுக்க வேண்டும் என பாஜக களம் இறங்கி உள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். 

 
தேர்தலுக்கு நாங்கள் எப்போதோ தயாராகி விட்டதாகவும், தமிழ்நாட்டில் இது ஒரு சரித்திர தேர்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் கடும் வெயில்: பொதுமக்கள் வெளிய வர வேண்டாம்.. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!