Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொடூர கொலை! – பொன்னேரியில் அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
crime
, ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (09:27 IST)
பொன்னேரி அருகே ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொடூர கொலை. இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேரில் ரவுடியின் கைகளை பின்புறம் கட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
தனிப்படை அமைத்து கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சி மன்றம் அருகே நேற்று முன் தினம் இரவு பழவேற்காடு சாலையில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொன்னேரி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது பின்புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் தனியாகவும், தலை தனியாகவும் இருந்துள்ளது.  போலீசாரின் விசாரணையில் இரு சக்கர வாகனம் ஒன்றில் 4 பேர் வந்ததாகவும் அதில் இருந்த சுமார் 25 வயது நிரம்பிய இளைஞரின் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில், அவரை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறக்கி
அரிவாளால் வெட்டியதில் தலை தனியாக விழுந்ததாகவும் உடல் தனியாகவும் விழுந்ததாகவும், அந்த இளைஞரின் தலையை காலால் எட்டி உதைத்து சாலையில் தள்ளி விட்டு 3 பேர் இரு சக்கர வானத்தில் தப்பி சென்றதாகவும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.

தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்டது  மீஞ்சூர் அருகே மௌத்தம்பேடு கிராமத்தை சேர்ந்த ராகேஷ் (26) என்பது தெரிய வந்தது. இவர் மீஞ்சூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்துள்ளார்.

இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனை தொடர்ந்து தலை தனியே துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் சடலத்தை கைப்பற்றிய பொன்னேரி காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் ராகேஷ் பெட்ரோல் திருடிய போது தட்டிக்கேட்ட வாகன உரிமையாளரை வெட்டி கொலை செய்திருந்தார்.

அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் தற்போது கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் ரவுடி ஒருவர் தலை தனியே துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடலில் கலக்கும் நீரை மக்களுக்கு வழங்க மறுப்பது ஏன்? – அரசுக்கு ஆர்.பி.உதயக்குமார் கேள்வி!