Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த ஆட்டை திருடி சென்ற மர்ம நபர்கள்...

Advertiesment
கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த ஆட்டை திருடி சென்ற மர்ம நபர்கள்...
, வெள்ளி, 13 ஜூலை 2018 (15:26 IST)
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ள ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.


 
சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிப்பவர் வீரசமர். இவர் கொம்பன்,மருது, கடைக்குட்டி சிங்கம் உட்பட சில படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக ஒரு ஆட்டை வளத்து வந்தார். நேற்று இரவு அந்த ஆட்டை மர்ம நபர்கள் சிலர் திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆட்டிற்கு டைசன் பெயரிட்டி அவர் செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்த ஆடு கடைக்குட்டி சிங்கம் படத்திலும் சில காட்சிகளில் நடித்துள்ளது. கடந்த 9ம் தேதி இரவு பால் வண்டி ஒன்று அவரது வீட்டின் முன்பு வந்து நிற்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, அந்த வண்டியில் வந்த சிலரே அந்த ஆட்டை திருடி சென்றிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டைசனை யாரும் அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாது. முட்டி தள்ளி விடுவான். அவனுக்கு மயக்க மருந்து கொடுத்தே திருடி சென்றிருக்க வாய்ப்புண்டு. இந்த ஆட்டை கண்டுபிடித்து தந்தால் சன்மானம் தரப்படும் என நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளேன். டைசன் கிடைப்பான் என நம்புகிறேன் என வீரசமர் என வேதனையுடன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழில் வளர்ச்சி: பின்தங்கிய மாநிலங்கள் தமிழகத்தை முந்துகின்றனவா?