Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகைகள் -அமைச்சர் உதயநிதி டுவீட்

200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகைகள் -அமைச்சர் உதயநிதி டுவீட்
, சனி, 6 மே 2023 (19:03 IST)
திறன்மிகு 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டிற்காக  ஊக்கத்தொகை பற்றி அமைச்சர் உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்தாண்டு, புதிதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  உருவாக்கப்பட்டு, இதன் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற பின் பல புதிய அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திறன்மிகு 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டிற்காக  ஊக்கத்தொகை பற்றி அமைச்சர் உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில்,''ELITE, MIMS, CDS ஆகிய பிரிவுகளின் கீழ்  தமிழகவிளையாட்டுத்துறை சார்பில் திறன்மிகு 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான தகுதியுடைய வீரர் - வீராங்கனையர் இன்றிலிருந்து மே 20 ஆம் தேதி மாலை வரை  https://sdat.tn.gov.in இணையதளத்தின் வழியே தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 ஆம் சார்லஸ் மன்னராக முடிசூட்டப்பட்டார்!