Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அரசு ஒதுக்கும் நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்- அண்ணாமலை

Advertiesment
மத்திய அரசு ஒதுக்கும் நிதியை  முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்- அண்ணாமலை
, செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (18:52 IST)
மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, பட்டியல் சமூக மக்களின் நலனுக்காக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று  திமுக அரசை வலியுறுத்துவதாக  பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’ராணிப்பேட்டை கீழவீதி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி, 2021 ஆம் ஆண்டு முதல், பள்ளிக்கான கட்டிடம் இல்லாமல், மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி இல்லாத வாடகைக் கட்டிடம் ஒன்றில் இயங்கி வருவதாக நாளிதழில் வந்துள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். 

கண்டுகொள்ளாமல், ஆசிரியர்களுக்கான ஊதியமும் வழங்காமல், ‘வேண்டுமென்றே பட்டியல் சமூக மாணவர்களை பிரித்துப் பார்க்கிறது திமுக’ என்றே கருத வேண்டியிருக்கிறது.

உடனடியாக தமிழகம் முழுவதும் இருக்கும் ஆதிதிராவிடர் பள்ளி, விடுதிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும்  அதற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, பட்டியல் சமூக மக்களின் நலனுக்காக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவும்  தயங்காது எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி உபியில் மாஃபியா கும்பல் மிரட்ட முடியாது: முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை..!