தென்காசியை சேர்ந்த வேல்சாமி என்பவர் தன் மகளை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் காசி மாவட்டத்தில் வசித்து வருபவர் வேல்சாமி(51). இவருக்கு இரண்டு மகன் கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.மகள் சுதா கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, பீடி சுற்றும் தொழில் செய்துவருகிறார்.
இந்நிலையில் சுதா அருகேயுள்ள பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதில்,வேல்சாமிக்கு விருப்பமில்லை எனத தெரிகிறது. ஆனால், தான் அவரைத்தான் திருமணம் செய்துகொள்வதாக சுதா பிடிவாதம் பிடித்துள்ளார்.
அதனால், ஆத்திரம் அடைந்த வேல்சாமி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுதாவின் தலையில் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த சுதாவை உறவினர்கள் மருத்துவமனைகுக் கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேல்சாமி, காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.