தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள 2ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டி பகுதியில் இன்று மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிப்பதற்க்காக கரைக்கு வந்தனர். அங்கு கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளைச் சுற்றிலும் கடல் நீர் இல்லாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர். எப்போதும் 5 அடிக்கு குறையாமல் உள்ள பரப்பில் இன்று தண்ணீரை இன்றி காய்ந்து இருந்தது. அதனால் கடல் உள்வாங்கி இருப்பதாக உணர்ந்துகொண்டு கடலுக்குள் செல்லாமல் வீட்டுக்கு சோகத்துடன் திரும்பினர்.
கடல் உள்வாங்குவது என்பது புயல் காலங்களில் மட்டும்தான் நடக்கும். ஆனால் இன்று அதிக தூரம் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்குள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகின்றன.