கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பகுதியில் வசித்து வந்த ஒரு இளைஞர் அங்குள்ள பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த செவ்வாய் இரவில் ஒரு ஹோட்டலில் புரோட்டா வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, கடைக்காரர் இளைஞரின் பார்சலுக்கு ஒரு குருமா பாக்கெட் கொடுத்துள்ளார். ஆனால் இளைஞர் தனக்குக் கூடுதலாகல் ஒரு குடுமா பாக்கெட் கேட்டுள்ளார்.
அப்படி தரமுடியாது என கடைக்காரர் கூறியதாகத் தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், கடையிலுள்ள புரோட்டா மாஸ்டர், கடை உரிமையாலர் உள்ளிட்ட 3 பேர் இளைஞரை அடித்துள்ளனர். இதில் இளைஞர் கடுமையாக காயம் அடைந்துள்ளார்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.