Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான ஸ்ரீராம் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ரவிச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை......

Advertiesment
enforcement department raided

J.Durai

, புதன், 23 அக்டோபர் 2024 (17:06 IST)
அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனையிட்டு வருகிறது.
 
அதன் தொடர்ச்சியாக திருவேற்காடு கோ -ஆப்ரேட்டிவ் நகர், அண்ணம்மாள் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
ஒரு காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர், சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் வந்து அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
 
இந்த வீடு வைத்தியலிங்கம் எம்எல்ஏவுக்கு சொந்தமான ஸ்ரீராம் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீடு என்று கூறப்படுகிறது.
 
முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு எம்எல்ஏவாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்த போது, ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 
 
அதன் தொடர்ச்சியாக இந்த சோதனையில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெக மாநாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டால்.. 234 தொகுதிகளுக்கும் வழக்கறிஞர்கள் நியமனம்..!